கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . .- சொற்கீரன்

கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . கொழுநிழல் மறைக்கும் அடர்செறிக்கானின் வரிநிழல் காட்டும் ஓர் வேங்கை கண்ணுறீஇ உறுமிய ஒற்றும் செஞ்சின வேங்கையும்  வெரூஉய் ஒளிக்கும் குழைகவி யோமை சேய்மையின் வரூஉம் ஆளி ஆங்கு கண்டே. வெண்கோடு குத்தி வெரு வெரு செய்யும் மள்ளற் களிறும் சுரத்தின் கண்ணே  பிளிறும் ஓதையில் நோலா நெஞ்சும் நோன்றார் கலி மிழற்றும் காட்சி மலியும் நிரம்பா நீளிடை அரசிலை எஃகம் தனியன் ஏந்தி  வரும் கொல் என துயில் மறுத்து நெஞ்சில் வேகும் வேர்க்கும் வேர்க்கும்….

உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு- சொற்கீரன்

உள்ளம் முழுதும் பூத்த வெள்ளைச் சிரிப்பு குளித்து மணற்கொண்ட கல்லா இளமை புன்னை பொறி இணர் தூங்குமரம் வாங்கி சுழித்த பொருனையின் செழித்த வாய்க்கால் தோய்ந்த நாட்களின் நினைவுகள் மூசும் பண்டு பெரிய காலம் தடங்கள் காட்டும். திணிமணற் பாவை உருகெழு கையின் தேன்படு சிதரினும் பலவே பலவே. சிறுவளை முரல சில்பூ அவிழ்ந்தன்ன‌ பிஞ்சுவயதின் பூஞ்சினைக்  கையள் குண்டுநீர் துழாஅய் யான் காட்டிய‌ வெள்ளைச்சிறு கல்லினும் வெள்ளிய‌ நகைத்து என்னுள் பூத்தாள் கலித்தே . – சொற்கீரன் [ வாய்க்காலில் குளிக்கும்  போது ஆழமாய்  முக்குளி…

கலங்காதே பெண்ணே! விடியலில் வருவான்! – சொற்கீரன்

கலங்காதே பெண்ணே! விடியலில் வருவான்! மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற  வான் அதிர் உடுக்கள் வெள் நிலம்  வீழ்ந்து பரந்து விழி விழி  உறுத்து  வியத்தல் அன்ன  நின்னைக்கண்டு  நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய். வெங்கல் அருங் கடம் சென்றான் ஆங்கு   மீள்வழி நோக்கி வானப்பரவை  உன் விழி அம்பு கூர்த்த வடுக்கள்  எண்ணி எண்ணி புள்ளியிட்டாய் . அதனை அழித்திட வருவான் என்னே. கலங்கல் மன்னே.காலையும் விரியும். பொழிப்புரை  மெல்லிய பூங்கொத்து உடைய முருங்கை மரத்தின் ஒளிசிந்தும் சிறு பூக்கள் உதிர்ந்து தரையில் படர்ந்து கிடப்பது…

பீலிபெய் நடுகல் – சொற்கீரன்

பீலிபெய் நடுகல் மண்காத்து தன் உயிர் நீத்தவர்பீலிபெய் நடுகல் அல்லது பிறிது உரைபேழ் வாய்ப் பூதம் பேய்க்கதை கூறும்மறை மொழி ஈண்டு என்னிஃது பகரும்.பிறப்பும் இறப்பும் அடுக்கிய ஊழ் தனில்இருப்பின் பொறிகிளர் எல்லே எல்லாம்சொல்லிச்செல்லும் மெய்மொழி உணரார்கல்படு சுனை ஒரு நுங்கின் கண் என‌பளிங்கு வீழ்த்த நிழற்பட்டாங்குஉள்ளம் பாழ்த்து அஞ்சவும் படுமே. – சொற்கீரன் விளக்க உரை தன் தாய்மண் காக்க உயிர்நீத்தவர் பற்றி மயில் பீலி சூட்டிய அந்த நடுகல் காட்டும் உரைகள் தவிர வேறு வாய்பிளந்த பூதம் பேய்களின் கதைகளா அங்கு…