கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 40 : சொற்போர் புரிக

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை- தொடர்ச்சி) பூங்கொடிசொற்போர் புரிக பிழைஎனப் படுமேல் பேசுக அரங்கில்கழைஇனி தென்றேன் கசக்குமென் பீரேல்சான்றுடன் நிறுவுக, சால்பது வாகும்; 120நான்தரு கருத்தினை மறுத்துறை நவிலுதல்அறிவோர் கொள்கை; அதனை விடுத்துச்சிறியோர் செயல்செய முனைதல் நன்றோ?திறமிலார் செயலெதும் திருந்திய கொள்கைஉரமுளார் போக்கினை ஒதுக்குதல் இல்லை; 125 பூங்கொடி துணிபு சாதல் உறுதி, சதைபடு இவ்வுடல் 135கழுகு பருந்துகட் குணவாய்க் காட்டில்அழுகிக் கிடக்கும், அத்தகு நிலையுடல்என்னின மக்கள் எறிகல் பட்டுச்செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்கமாய்தல் பெறின்நான் மனங்கொள ஏற்பேன்;…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 39 : சிறியர் செய்கை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 38 : அரங்கின் தோற்றம்- தொடர்ச்சி) பூங்கொடிசிறியர் செய்கை றற்பச் செயலென அறியார்; அறிஞர்நெஞ்சிற் பதிந்த கருத்துரை நிலமிசைவிஞ்சிப் படர்வதை விரும்பாச் சிறியர் 95புன்மைச் செயல்செயப் புறப்படல் படரிருள்புன்மைக் கணத்தைப் புறங்காட் டச்செயும்கதிரோன் தன்னைக் கையால் மறைக்கும்மதியோர் செயலினை மானும்; அந்தோ! பூங்கொடியின் கனன்றுரை நுவன்றனள் ஒருகல் நுதற்படச் செந்நீர்சிந்திச் சிவந்தன மேடையும் ஆடையும்;கனன்றனள் சொல்லினைக் கனலெனச் சிந்தினள்;பெண்மையில் ஆண்மை பிறத்தலுங் கூடும் 105உண்மை உணர்த்தினள் ஊரினர்க் கவ்விடை;`சான்றீர் பெரியீர் சாற்றுவென் கேண்மின்!ஆன்ற பெரும்புகழ்த் தமிழின் அருமைகேடுறல் நன்றோ?…