தோழர் தியாகு எழுதுகிறார் : சொல்லடிப்போம் வாங்க!

(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி) கைச்சரக்கா மார்க்குசியம்? – தொடர்ச்சி குமுக மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை, குமுக வளர்ச்சி நெறிகளின் படி முதலியம் அழிவதும் குமுகியம் (SOCIALISM) மலர்வதும் தவிர்க்கவியாலாதவை என்ற மார்க்குசியத்தின் உறுதியான நிலைப்பாடு அதனை ஓர் ஊழ்வினைக் கோட்பாடு போல் காட்டும் தீவாய்ப்பு உள்ளது. ஆனால் இஃது உண்மையில்லை. மாந்தர் விரும்பிய படியெல்லாம் குமுக மாற்றமோ அதற்கான புரட்சியோ நடந்து விட மாட்டா. அதே போது மாந்தர் விரும்பாமலும், மாந்த முயற்சி இல்லாமலும் எம்மாற்றமும் வராது,…

தோழர் தியாகு எழுதுகிறார் 116 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2)

(தோழர் தியாகு எழுதுகிறார் 115 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1) தொடர்ச்சி ) ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2) பன்வார் மேகவன்சி என்ற பெயரைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இவர் ஒடுக்கப்பட்டவராக இருந்தும் ஆர்எசுஎசு அமைப்பில் சேர்ந்து பற்றார்வத்துடன் பணி செய்தவர். 1991 மே முதல் 1992 திசம்பர் வரை ஆர்எசுஎசு-இல் இருந்தவர். இது ஆர்எசுஎசு வரலாற்றில் முனைப்புமிகுந்த காலம். பாபர் மசூதியை இடித்த காலம். கரசேவைக் காலம்.   பாபர் மசூதி இந்து தேசத்துக்கு அவமானச் சின்னம் என்றும், அதை இடித்து அந்த இடத்தில் இராமர் கோயில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 52 : சொல்லடிப்போம் வாங்க! (7)

(தோழர் தியாகு எழுதுகிறார் 51 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (7) அன்பர் சிபி எழுதுகின்றார்:ஆழ-கடல் என்பதில் உயிரொலி மெய்யொலியோடு புணர அகரம் கெடும். இவ்விதி தாரள-இயம் என நிலைமொழியிலும் வருமொழியிலும் உயிரொலி நிற்கும் நிலைக்குப் பொருந்தா என எண்ணுகிறேன். சிபி சுட்டும் இலக்கணம் சரி என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லி விட்டார். இந்தப் புதிய மடல் குறித்தும் அவர் கருத்தறிவோம்! சொல்லாய்வறிஞர் அருளியாரிடமும் பேசுகிறேன். அது வரை முடிவெடுப்பதைத் தள்ளி வைத்து விட்டு மற்ற சொல்லாக்கங்களில் கவனம் செலுத்துவோம்.Imperiaslism = ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? அல்லது…

தோழர் தியாகு எழுதுகிறார் 46: சொல்லடிப்போம் வாங்க! (6)

(தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (6) பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்: இயம், இசம், இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம்  என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்? தாராளியம் என்பது எப்படி அமைப்பையும், தத்துவத்தையும் குறிக்கிறது? என்பதை விளக்கப்படுத்துங்கள். இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும். இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர்  இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது…