அடங்கா வெறி! – தங்கர்பச்சான்
எங்கே போகிறது மன்பதை? பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. பண்பாட்டில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும். செய்தித்தாள்களில் நாள்தோறும் தவறாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய்க் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை. நகரம், சிற்றூர் என்றில்லாமல் தொடரும் இந்தக் கொடுஞ்செயல்கள்,…