(அதிகாரம் 064. அமைச்சு தொடர்ச்சி) 02. பொருள் பால்        06. அமைச்சு இயல் அதிகாரம் 065. சொல்வன்மை     கேட்பார் உள்ளம் கொள்ளும்படி, சொற்களைச் சொல்லும் வல்லமை.   நாநலம் என்னும் நலன்உடைமை, அந்நலம்,     யாநலத்(து) உள்ளதூஉம் அன்று.           எல்லாத் திறன்களுள்ளும் மிகச்சிறந்த         வெல்திறன் பேச்சுத் திறனே.   ஆக்கமும், கேடும், அதனால் வருதலால்,      காத்(து)ஓம்பல் சொல்லின்கண் சோர்வு.           வளர்ச்சியும், வீழ்ச்சியும், தரும்பேச்சைத்,         தவறு இல்லாது பேசுக.   கேட்டார்ப் பிணிக்கும்…