திருக்குறள் உலகிற்குரியது – வ.சுப.மாணிக்கம்

  செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்; செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால்…

சொல் காக்க! – மதன். சு, சேலம்

கூரிய வாளைவிட கூரிய  சொல் வலிமை! கூடுமட்டும்  சொல் காக்க கூடுமுந்தன் வாழ்வில் நலம் ! வாளினாலிவ் உடலில் துன்பம் சொல்லினாலிவ் வாழ்வே துன்பம் ! வரம்புடைய  சொல்லால் வாழ்வினிலே சேரும் இன்பம் ! ஒரு  சொல் உரைத்திடினும் உயர்வு எனின் உலகை ஆளும் ! தவறான  சொல்  லெனின் தரமிழந்து தரணி மாளும் ! ஆதலினால்  சொல்லினை அளந்து நீங்கள் பேசிடுவீர் ! காதலினால் பேசுதற்போல் கண்ட  சொல் விட்டிடாதீர் ! மதன். சு   சேலம் ecemadhan94@gmail.com

எல்லாச் சொல்லும் தமிழ் குறித்தனவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

       உணவுப் பொருளாயினும் நாம் பயன்படுத்தும் பிற பொருளாயினும் நாம் தூய்மையையே விரும்புவோம். கலப்படம் கேடு தரும் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். ஆனால் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலும் கலப்படம் கூடா என்பதை நாம் உணருவதில்லை. கலப்படச் சொற்களும் கலப்பட நடையும் நம்மை வாழ்விக்கும் எனத் தவறாக எண்ணி நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இத்தகைய கலப்பினால்தான் தன் பரப்பினை இழந்து துன்புறுகின்றது என்பதையும் புரிந்து கொள்வதில்லை. அதே நேரம் தூய…