அருவினை ஏதுமில்லை – சொ.பத்மநாபன்
அருவினை ஏதுமில்லை அசைவிலா ஊக்கம் பெற்றால் திருவினை யாய்முடியும் திருக்குறள் நூல் கற்றால்! – அருவினை விதிசதி எல்லாம்சாயும் மதிவழி நாம்உழைத்தால் கதிஎன வள்ளுவத்தைக் கருத்தினில் நாம்பதித்தால்! – அருவினை பிரிவினை உணர்வகற்று உறவினை வளர்ப்பதற்கே நிறப்பகை தனையகற்று அறப்பகை செழிப்பதற்கே! உதிக்கின்ற செங்கதிர்போல் உலகிற்கே ஒளியூட்டும் நதிநீரைப்போல் நடந்து நமக்கெல்லாம் பயன்கூட்டும்! – அருவினை உருவத்தில் அறிவுமில்லை உயரத்தில் உயர்வுமில்லை பருவத்தில் பூப்பதெல்லாம் பயன்தரும் என்பதில்லை! சிரிப்பதும் அழுவதுவும் செயற்கையா? இயற்கையன்றோ! பிறக்கிறோம் பெண்வயிற்றில் பிறகிங்கு வேற்றுமை ஏன்? – அருவினை -திருக்குறள்…