வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை – சொ.வினைதீர்த்தான்
வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை வள்ளுவம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. காப்பீடு 1800 களில் முகிழ்த்த ஒரு பொருளாதாரக்கோட்பாடு. வள்ளுவம் படித்த பிறகு “வேறொருவர் வாய்க்கேட்க நூல் உளவோ” என்றும் “எல்லாக்கருத்தும் இதன்பால் உள” என்றும் திருவள்ளுவமாலை கூறுவதால் காப்பீட்டுக் கொள்கைகளை வள்ளுவத்தில் தேடிப்பார்த்ததில் விளைந்தது இப்பதிவு. காப்பீடு: காப்பீடு ஒரு பொருளாதார ஏற்பாடாகும். மனிதன் ஒரு பொருள் ஈட்டுகிற சொத்து(Income generating Asset) எனக் கொள்ளலாம். அந்த பொருள் ஈட்டுகிற திறன் சந்திக்கிற இடர்ப்பாடுகள் இரண்டு. அதாவது வாழ்வு சார்ந்த இரண்டு இடர்களால்…
இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார்? – சொ.வினைதீர்த்தான்
தொண்டரடிப்பொடியாழ்வார் இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார் என்று அற்புதமாகப் பின்வரும் பாசுரத்தில் பதிவுசெய்து இறைப்பற்றின் நோக்கத்தை அழகுற உணர்த்திவிடுகிறார். “மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.” மனத்தூய்மை வாய்மையால் காணப்படுமென்றது வள்ளுவம். மனத்தினில் தூய்மையில்லாமல் “நமநம” என்று பேசுவதாலும், தலங்கள்தோறும் அலைவதாலும், புறச்சின்னங்களாலும் அரங்கனின் அருள் கிடைத்துவிடாது. கள்ளநெஞ்சத்திற்குப் பற்று – பக்தி – வசப்படாது…
கோதில்லாக் குறிக்கோளும் குலசேகர ஆழ்வாரும் – சொ.வினைதீர்த்தான்
குலசேகர ஆழ்வாரின் அருமையான உவமைகள் வழியாக குறிக்கோள், குறிக்கோளின்மீதுள்ள தீராப்பற்று, அதனை அடைதல் ஆகியவை குறித்து எண்ணிப்பார்ப்பது இந்தப்பதிவு. எந்தவொரு காதல் பாடலையும் அல்லது தெய்வபக்திப் பாடலையும் வெற்றி அல்லது குறிக்கோளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காதல் என்பதும் பக்தி என்பதும் ஒன்றின் மீதுள்ள ஏக்கமும் அடையவேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமுமே அல்லவா? முருகனின் பக்கலிலுள்ள வள்ளியும் தெய்வானையும் குறிப்பது சிற்றாடை கட்டிய பாவையரையல்ல என்பார்கள். ஞானசக்தியாகிய முருகனை(Goal) அடைய இச்சாசக்தியாகிய (Passion) ஆழ்ந்தவிருப்பமும் கிரியாசக்தியாகிய(Action) செயலும் உடனிருக்கவேண்டுமென்பார்கள். “வெற்றிக்கு அடிப்படை அதைப்பற்றிய சிந்தனை; அதற்கேற்ற…
தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன் – பூதத்தாழ்வார்
தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார். ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ‘ஞானத்தமிழ்’ என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார். தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்கவல்லது….
சங்கத் தமிழ் 87 ஆவது மாதக் கூட்ட அழைப்பு
வைகாசி 30, 2046 / 13-6-2015 சனிக்கிழமை, மாலை 6.00 மணி தலைப்பு- ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் தமிழ்ச் சுவை’ ஆய்வுரை: திரு. சொ. வினைதீர்த்தான். வருக! வருக! இவண் செயலர் த. மு. எ. க. ச. காரைக்குடி.
மறச்செயல்களிலும் அற நெறி பேணிய முன்னோர்! – சொ.வினைதீர்த்தான்
ஒரு பதிவுக்காகப் பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரத்திலுள்ள பாடல்களைப் படித்தேன். கீழ் வரும் பாடல் கவர்ந்தது; நம் முன்னோர் அறம் வியக்கவைத்தது. திண்ணன் என்று பெயரிடப்பட்ட வேடனாகிய கண்ணப்பர் தக்க பருவம் வந்ததும் வேடர்களுடன் முதல்முதலாக வேட்டைக்குச் செல்கிறார். மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். கொடிய மிருகங்களை எதிராக ஓடிச் சென்று எதிர்த்துக் கொலைசெய்கின்ற வேடர்கள் (கொடியனவெதிர் முடிகியுறு கொலைபுரி சிலை மறவோர்) வேட்டை நெறி முறைகளைக் கடைப்பிடிதனராம். 1.உடுக்கை போன்ற கால்களையும் மடிந்த மெல்லிய காதுகளையும் உடைய யானைக் கன்றுகள் மேல் வேட்டையைத்…
வினைதீர்த்தான் நடத்திய தன்முனைப்புப் பயிலரங்கம்
சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் செயங்கொண்ட விநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் படிக்கும் 104 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் ஆனி 32, 2045 / 16.07.2014 அன்று முன்னேற்ற வழி ஊக்குநர் சொ.வினைதீர்த்தான் அவர்களால் நடத்தப் பெற்றது. கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலர் திரு வயி.ச.இராமநாதன் அவர்கள் இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். [ 1. செயலர் திரு வயி.ச. இராமநாதன், ஊக்குநர் சொ.வினைதீர்த்தானுக்குப் பொன்னாடை அணிவித்தல் 2. பொருளாளர் திரு திருஞானம் , செயலர் திரு வயி.ச. இராமநாதன் ஆகியோருடன்…
பள்ளுபாடலுக்குத் துள்ளியாடுவோம்! – சொ.வினைதீர்த்தான்
சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு கொண்டது பள்ளு இலக்கியம். 18 ஆம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கையைக் கம்பனின் கவிநயம்போல் இனிய கூறும் இலக்கியம் முக்கூடற்பள்ளு. இதன் சிறப்பு குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” என்னும் தலைப்பில், ஆனி 28, 2045 / 12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கியக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை, சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் எழுபத்து நான்காவது…
காரைக்குடியில் வினைதீர்த்தானின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்
ஆனி 25 , 2045 / சூலை 9, 2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது. தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் இதனைச் சிறப்பாக நடத்தினார். பரம்பரைச்சிறப்புடைய இந்நகராட்சிப்பள்ளி 1938 இல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் இராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் இராசா பயிலரங்கு நடத்த…
“வாழ்வைக் கொண்டாடுவோம்” – சொ.வினைதீர்த்தான்
முனைவர் பட்டம் பெற்ற 80 அகவை இளைஞர் சித்தர் அ.பாண்டியன்
18.02.2014 அன்று நடைபெற்ற அழகப்பா கல்லூரியின் 26 ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் ஆளுநர் உரோசையா அவர்கள் தலைமையில் நீதியரசர் இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். நேர்த்தியான அரங்கில் 157 முனைவர் பட்டதாரிகளும், 112 முதன்மை விருது பெற்ற பல்வேறு புலங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் நேரில் பட்டம் பெற்றனர். இளைஞர் பட்டாளத்தையும் அவர்களுடைய பெற்றோரின் பெருமைமிகு பாச முகங்களையும் கண்டது மகிழ்ச்சிக்குரியது. முனைவர் பட்டம் பெற்றவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஒளிவீசும் கண்களும், அன்பு ததும்பும் சொற்களும்கொண்ட 80 அகவை இளைஞர் முனைவர் சித்தர் அ.பாண்டியன்….