தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி
(தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இந்த மடலின் முதல் தலைப்பில் காணப்படும் கலைச் சொற்கள் பலருக்கும் புதியனவாய் இருக்கக் கூடும். அவற்றை விளங்கச் செய்யும் நோக்கில் “சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி” என்ற தலைப்பில் ஏர் 2018 நவம்பர் 7 (புரட்சி நாள்) இதழில் இடம்பெற்ற என் கட்டுரையை இப்போதைய தேவை கருதி உங்களுடன் பகிர்கிறேன். சொல்லடிப்போம் வாங்க! சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி சோசலிசப் புரட்சியைக் குமுகியப் புரட்சி என்று எழுதியிருந்தேன். ஓரிரு ஆண்டுகளாகவே இந்தத் தமிழாக்கத்தைப் பயன்படுத்தி…