செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்! நூறாண்டு போராட்டத்தின் வெற்றி, தமிழின் செம்மொழித்தன்மைக்கு அறிந்தேற்பு அளித்தது. அதன் தொடர்ச்சியாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்ததும் அதனைத் தமிழ்நாட்டில் இயங்கச் செய்ததும். கலைஞர் கருணாநிதியும் சோனியாகாந்தியும் மேற்கொண்ட முயற்சியால் கிடைத்த நன்மை பறிபோகின்றது, (நன்மை செய்த இவர்களே செம்மொழிக் காலத்தை மாற்றியதன் விளைவே இன்றைய தீமையும்!) இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருக்கிறது. அதற்காக அதன் பணிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. தலைவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அறிஞர்களுடன் கலந்துபேசி உரியதிட்டங்கள் தீட்டிச்…