தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் பலரும் பழமைக்குப் பாலமாகத் திகழ்ந்து அளப்பரும் தமிழ்த்தொண்டாற்றி யுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்களவர், சைவச் சித்தாந்தப் பெரும்புலவர், வைதிக சைவச் சித்தாந்தச் சண்ட மாருதம், பரசமயக்கோளரி என்று பல பட்டங்கள் பெற்ற சோமசுந்தர(நாயக)ர் ஆவார். சோமசுந்தர(நாயக)ர், இராமலிங்க நாயகர் – அம்மணி அம்மையார் ஆகிய இல்லற இணையரின் மூத்தமகனாக ஆவணி 02, 1877 / ஆகத்து 16, 1846 அன்று சென்னையில் பிறந்தவர். இவரி்ன் தந்தை சைவ நெறியினராகவும் தாய் வைணவராகவும் விளங்கினர். தந்தையார் தம் மனைவியின் விருப்பத்திற்கிணங்க அனைவருக்கும் வைணவப் பெயர்களையே சூட்டியுள்ளார். தம்பியர் திருவேங்கடசாமி(நாயகர்), நாதமுனி(நாயகர்), வரதராச(நாயக)ர், தங்கை தாயாரம்மை…