அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4
துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4:பேராசிரியர் வெ.அரங்கராசன் சமுதாயம் சார்ந்தவற்றுள் மருத்துவம் சார்ந்த ஒர் உண்மை நிகழ்வு: தம்முயிரைப் பற்றிச் சிந்திக்காமல், பல்லுயிர்களைக் காத்த நல்லறத்தர்: குடியேற்றம் [குடியாத்தம்] மண்ணுக்குப் பெருமையைக் குடியேற்றிய நல்லறத்தர் செவிலியர் செயக்குமார். பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர் செயக் குமாரை நேரில் அழைத்து, மாண்பமை முதல்வர் முத்து வேல் கருணாநிதி இசுதாலின் அவர்கள் பாராட்டிப் பெருமைப்படுத்தி, அகம் மகிழ்ந்த அரிய உண்மை நிகழ்வு. வேலூர் மாவட்டம் குடியேற்றம் நெல்லூர்ப்பேட்டைப் பாவோடும்தோப்பு, நீலிக் கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் செயக் குமார்…