தமிழ் – ச.சுதாகர்
தமிழ் தமிழின் சிறப்பு தனை யறிந்திட அமிலம் போல் ஆசை நெஞ்சரிக்க, தொடங்கினேன் கற்க தொல் காப்பியம். குடம்தேன் எறும்பு குடிக்க முயல்வதுபோல் எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்; என் உயிர் உள்ள வரை, உணவு போல் உயிர்மொழித் தமிழை மனம்தினம் சுவைக்கும் வண்ணம் செய்யவே! ச.சுதாகர்
சாக்கடை தருமோ நறுமணமே! – ச.சுதாகர்
சாக்கடை தருமோ நறுமணமே! உள்நோக்கம் தீதாய் ஊருக்கு நல்லதாய் சொல்செயல் காட்டிடும் சூது மனமே நோக்கம் மறைத்திடும் நுட்பம் அறிந்தாலும் சாக்கடையும் என்றும் தருமோ நறுமணமே ச.சுதாகர்
மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர்
மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர் மனவலி போக்கும் மருந்துகள் வாங்க மருந்தகம் முகவரி கேட்டேன் தினம் வணங்கும் இறையிடம் ; அருளால் தக்கதோர் விடைஉளம் உணர்ந்தேன். மன வோட்டத் தடம் மாற்ற மரக்கறி வளர்த்திடத் திட்டம் மனவலி போக்கும் மருந்துகள் கிடைக்கும் மருந்தகம் புழைக்கடைத் தோட்டம் ச.சுதாகர் http://subhastories.blogspot.in/ scsudhakar72@gmail.com