எங்கள் சமஉ – முனைவர் க.தமிழமல்லன்
எங்கள் சமஉ எங்கள் சமஉ இணையே யற்றவர்! தங்கக் கடத்தல் தலைவர்! மாற்றான் மனைவியைக் கைப்பிடித்து மகளையும் மணந்தவர்! மனைவணி கத்தில் மாபெரும் கொள்ளையர்! ஒருமனை காட்டி இருவர்க்குப் பேசி! உருப்படி யாக உயர்த்தி விற்பவர்! காலில் விழுவதைக் கைகழுவி விட்டவர்! காலைக் காட்டிக் கவிழ்ந்திடச் சொல்லுவார்! மற்றவர் பணத்திலே பதாகை நட்டவர்! கற்றவர் நல்லவர் கறையிலா அறிஞரைப் பார்த்தால் பதறுவார்! வேர்த்துத் தம்மின் அறைக்குள் பதுங்குவார்! அண்ணன் தம்பி, கறைமது விற்பவன், காலைச் சொறிபவன், தேடித் தேடித் திறத்தைப் போற்றி விருதுகள் வழங்குவார்!…