தமிழில் தேசியக் கல்வி – பாரதியார்
தமிழில் தேசியக் கல்வி தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுமென்பது பொருள். ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் பாடசாலைகள் தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமின்றி பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர் சொல்ல வேண்டும். ‘ஃச்லேட்டு’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது. பாரதியார் : ஞானபாநு, செப்டம்பர் 1915
நா தமிழே பேசுக! இறகு தமிழே எழுதுக! – சுப்பிரமணிய சிவா
தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு சன சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதாள். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும், சீரும் அழிந்துவிடும். தமிழ் மொழியில் தேவையான பதங்கள் இல்லையென்று வாய் கூசாமல் கூறுகின்ற பாரத புத்திரர்களுக்கு அப்பதங்களை ஆராய்ந்து கண்டுபிடித்துக் கொடுங்கள். சரியான பதங்கள் இல்லையேல் தமிழ் வாணியின் கிருபை கொண்டு இன்னும் அநேக காரணப் பெயர்களையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம்…