மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்! – ஞா.கிருட்டிணப்பிள்ளை
மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்! “மட்டக்களப்புக்கு விடிவு காண வாருங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிழக்கு மாகாண அவை உறுப்பினர் ஞா.கிருட்டிணப்பிள்ளை துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விவரங்கள், கைப்பற்றப்பட்ட எமது மக்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றச் சிக்கல் ஆகியவற்றுக்கு நாம் முதன்மையாக முகம் கொடுக்கும் வேளையில், நிலையான அரசியல் தீர்வுக்கான நகர்வையும், எமது அரசியல் பயணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற வகையில் தெரிவிக்காமல் செய்து வருகின்றோம் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…