ஆரியர் தமிழர் தொடர்பால் சமற்கிருதத்தை அமைத்துக் கொண்டனர் – பாவாணர்

இந்திய நாகரிக அடிப்படை தமிழ் நாகரிகமே!   இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடை வழக்கை அல்லது பொத்தக மொழியை அமைத்து, அதிற் பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொண்டனர். இது என் ‘வடமொழி வரலாறு‘ என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.   தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள். தமிழ் தோன்றியது முழுகிப்போன குமரிக்கண்டத்தில் 50,000 ஆண்டுகட்குமுன். தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்குமுன். தமிழிலக்கண விலக்கியம் தோன்றியது கி.மு.10,000 ஆண்டுகட்குமுன். இதன்…

இந்திய நாகரிகம் தமிழரதே யாதல்! – பாவாணர்

வேதத்தை அடிப்படையான வரலாறு தவறானது!   வேத ஆரியர் மேலையாசியாவினின்று இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 2000 – 1500. அன்று அவர் கன்றுகாலிகளை ஓட்டித் திரியும் நாடோடிகளாயும், முல்லை நாகரிக நிலையின ராயுமே யிருந்தனர். அவருக்கு இலக்கியமுமில்லை; எழுத்துமில்லை. அவர் பேசிய மொழி கிரேக்கத்திற்கு இனமாயும் பழம்பாரசீகத்திற்கு மிக நெருங்கியதாயும் சொல்வளமற்றதாயும் இருந்தது. இந்தியாவிற் காலூன்றிய பின்னரே, அவர் இருக்கு என்னும் தம் முதல் வேதத்தை யாத்தனர். அவ் வேதமொழி வடஇந்தியப் பிராகிருதத்தையும் திரவிடத்தையும் தழுவியதென்பது அதில் எகர ஒகரக் குறிலின்மையாலும் பல தமிழ்ச்சொற்க…

இலக்கியவீதி-மறுவாசிப்பில் தமிழ்வாணன்,சென்னை

பேரன்புடையீர் வணக்கம்.  இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்  வரிசையில் இந்த மாத நிகழ்வாக, கார்த்திகை 03, 2046 / 19.11.2015 அன்று மாலை 6.30 மறுவாசிப்பில் தமிழ்வாணன் உறவு நட்போடு வருகை தர வேண்டுகிறோம்.

இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள் – ஞா.தேவநேயப்பாவாணர்

  இந்திய நாகரிகம் மட்டுமன்றி உலக நாகரிகமே இந்திய ஆரியரதென்று காட்டுதற்கு, வேதகாலத்தை அளவிறந்து முன் தள்ளி வைக்கும் முயற்சியொன்று இன்று வடஇந்தியாவில் நடை பெற்று வருகின்றது. அறியப்பட்ட தம்பியின் அகவை (வயது) உயர்த்திக் கூறப்படின், அண்ணனின் அகவை தானே உயர்தல் காண்க.   இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள்- ஞா.தேவநேயப்பாவாணர்   1. பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத்தலும் மறுத்தலும். 2. பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல். 3. தமிழ்நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதக்காலத்தி னின்றும் தொடங்கல்…