தவறாமல் வாக்களிப்போம்! தக்கவர்க்கு வாக்களிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தவறாமல் வாக்களிப்போம்! தக்கவர்க்கு வாக்களிப்போம்! தேர்தல் நாள் – வைகாசி 03, 2047 / மே 16, 2016 தேர்தல்நாளில் வாக்களிப்பது நம் கடமை. கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் “நீங்கள் யாருக்காவது வாக்களியுங்கள். ஆனால்,தவறாமல் வாக்களியுங்கள்” என்கின்றனர். வாக்களிப்பது நம் உரிமை! அதனைத் தக்கவர்க்கு அளிப்பதே நம் கடமை! நம்மை ஐந்தாண்டுகள் ஆளப்போகிறவர்கள் நம் குறைகளைக் களைபவர்களாகவும் நமக்கு உற்றுழி உதவுநர்களாகவும் இருக்க வேண்டும். யாருக்கோ வாக்களிப்பதன் மூலம் நாம், நம் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள் ஆவோம்! அதுபோல்…