தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி
தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தக்காளிப் பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையும் தக்காளிகள் சென்னை, பெங்களுர், வத்தலக்குண்டு, ஆண்டிப்பட்டி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் நெல், கரும்பு, வாழை போன்ற பயிரிடலை விட்டு விட்டுக் குறுகிய காலப்பயிர்களான தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில்…