செய்ந் நன்றி கொன்ற இந்தியம் – வேங்கடசாமி சீனிவாசன்

  உதவுநர் இனத்தை அழிக்கத் துணை நிற்கும் இந்தியம்! ஐம்பது ஆண்டுகளுக்கு, இதே மாதத்தில் (20.11.1964 அன்று சென்னையில் ) இந்தியத் தேசியப் பாதுகாப்பு நிதியாக (இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக ) அன்றைய தலைமை அமைச்சர் இலால் பகதூர் சாத்திரி அவர்களிடம் 1,00,00,000 கிராம் தங்கத்தைத் தமிழ்த் தாயின் பிள்ளைகள் வாரிக் கொடுத்தார்கள் ! ஆனால் … சொந்த உடன் பிறப்புகள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப் பட்டது கண்டு தமிழகம் துடித்த போதும் , தன் பிள்ளைகள் தன் கண்ணெதிரே கொன்று குவிக்கப் படுவதை…

பணிமலர் 1. அவ்வளவு தங்கமும் உங்களுக்குத்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

    (என் பணிவாழ்க்கையில் எண்ணற்ற மறுவாழ்வுப்பணிகளையும் முன்னோடிப் பணிகளையும் ஆற்றியுள்ளேன். காலமுறையில் இல்லாமல் அவ்வப்போது பூக்கும் நினைவின் மணத்தைப் பரப்ப விழைகிறேன்.) தமிழ்நாடு சிறைத்துறையில் நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது ஒரு நாள் நண்பர் ‘சௌ.’ என் பக்கத்தில் வந்தமர்ந்தார். “நேர்மையான அதிகாரி ஒருவர் பெயரைக் கூறுங்கள்” என்றார். நான்,“திருவள்ளுவன்” என்றேன். உடனே அவர், “நீங்கள் நேர்மையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக உங்கள் பெயரையே கூறுவதா?” என்றார். நீங்கள் பன்மையில் கேட்டிருந்தால் செளந்தரபாண்டியன், மீசை(பெரியசாமி) எனச் சிலரையும் சேர்த்துச் சொல்லியிருப்பேன். ஒருமையில்…