தேர்தல் சீர்திருத்தம் – தஞ்சை இறையரசன்
தேர்தல் சீர்திருத்தம் தேர்தல் நெருங்கிவிட்டது; சாலைகள் போடுகிறார்கள்; ஊர் ஊராக தெருத் தெருவாக மக்களைச் சந்திக்கிறார்கள்; குடிசைக்குள் நுழைந்து கிழவிகளோடு படம் எடுத்துக் கொள்கிறார்கள். தேநீர்க்கடைக்காரர் “இனி வருசம் ஒரு தேர்தல் வந்தாலும் நல்லதுதான்; தேர்தல் வரும் என்றதும் உடனே சாலை போடுகிறார்களே!” என்றார். பால் ஊற்ற வந்த உள்ளூர் ஆசிரியர் சொன்னார்: “இந்தத் தெருச் சாலை முன்று முறை போட்டதாச் சொல்லிப் பங்குபோட்டுக்கொண்டார்கள். அதிலே ஆளுக்குக் கொஞ்சம்பணம் போட்டு இப்ப இந்தச் சாலை!” “எவ்வளவு பெரிய பணக்காரர்களும் சேற்றிலே காலை வைத்துக் குடிசையிலே…