(2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 3. உறங்குகின்ற தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை (திருவள்ளுவர், திருக்குறள் 672) உரிய காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் காலந்தாழ்த்திச் செய்ய முற்படுவது, தனக்குரிய பணிகளைச் செய்யாமல் தட்டிக் கழிப்பது ஆகியவற்றிற்கு விருது தர வேண்டும் என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குத்தான் தர வேண்டும். எனவே, சிறப்பாகத் தமிழ்வளர்ச்சித்துறையைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் முனைப்பிலுள்ள இத்துறையின்…