இலங்கையில், தங்கள் விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சிறைவாசிகளில் ஐவருடைய நிலைமை பாதிப்புக்குள்ளாகி யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களில் மூவர் சிறைப்பிரிவு மருத்துவமனையில் பிப்பிரவரி 25 அன்று சேர்க்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் இசைவான மறுமொழி அரசிடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்ச் சிறைவாசிகளில் தெரிவித்துள்ளனர்.   கொழும்பு மகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்  சிறைவாசிகள் பதினைந்து பேரும், அநுராதபுரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைவாசிகள் இரண்டு பேரும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்திச்…