தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை   தெண்டிரை மூன்று திசையினுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   நனிமிகு பண்டுநற் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறும் பகைசிறி தின்றி இனிதுயர் வெண்குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும் வடதலை நாட்டை ஆரிய ரென்னு மயலவர் தங்கள் பேரறி யாத பெருமையி னாண்டாள்.     விந்த வடக்கு…