தமிழகமெங்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம்! – த.தே.பொ.க.

இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்பைக் கண்டித்து, தமிழகமெங்கும் சமற்கிருத எதிர்ப்பு வாரம்! தமிழ்த்தேசப்பொதுவுடைமைக்கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!   நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எசு.இ) இயக்குநர் அண்மையில்இந்தியா முழுதும் உள்ள சி.பி.எசு.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும்  ஆகசுட்டு 7 முதல் 13 முடிய சமற்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது மொழி – வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்குத்…

தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

  தமிழ்நாடெங்கும், தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிராகப்போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இவைபோல் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்  நடத்தப்பெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 ஆக்கும் மேற்பட்டோர்  தளையிடப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். வைகாசி 14, 2045, மே 28, 2014 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தோழர் பெ.மணியரசன் தலைமை ஏற்க பல்வேறு காட்சித்தொடர்பியல் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் பொது செயலாளர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர், செந்தமிழ்க்குமரன்…