ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9: பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்  6/9   தமிழ் தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை; சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிடமிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகின்றது என்றும் தொல்காப்பியம் பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட நடனப் பாடல்களுக்கான தொகுப்பேயன்றி இலக்கண நூலன்று என்றும் தமிழரின் பா வகைகள் பரத முனியின் ‘யமகம்’ என்பதன் அடிப்படையில் உருவானவை என்றும் தமிழர்க்கு எந்த வாழ்நெறியும் இல்லை; வடமொழி வேதநெறி…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9   “இன்று தமிழ்நாட்டில் ’சமசுகிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, எதிலாவது, ஒற்றுமை – பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.   தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கு இந்த சமசுகிருதம் பயன்படுகிறதா? ” என்று கேட்டுத் தமிழ்நாட்டவரிடம் ஓர் எண்ணத்…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9   பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் குறித்து நாவலர் நெடுஞ்செழியன்,  “மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயப் பற்றும், வருணாச்சிரம சனாதனதருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும்உண்மை.   மேற்கண்ட காரணம் பற்றித்தான்…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9   இந்தியாவில் உள்ள மொழிகள் தமிழாயினும் வங்காளமாயினும் மராத்தியாயினும் பஞ்சாபியாயினும் அனைத்துமே இந்திய நாட்டு மொழிகள்தாம். இம்மொழிகள் அனைத்துமே ஒரு செடியில் பூத்த பல மலர்களே. இவை அனைத்தும் மொழிகளின் அரசியும் கடவுள்களின் மொழியுமாகிய சமற்கிருதத்திலிருந்து பிறந்தவையே!  வளமையையும் தூயத் தன்மையையும் கொண்ட அது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கவல்ல பொது ஊடகமாகும். சமற்கிருதத்தைக் கற்பது கடினமன்று. இன்றைய நிலையில் சமற்கிருதம் இந்திய…

சிகாகோவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

சிகாகோவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா  பிறந்த நாள் விழா புலம் பெயர்ந்த நாட்டில் புத்துணர்வூட்டிய புதுமைப் புரட்சியாளர்கள் பிறந்தநாள்  செப்டம்பர் 18: தந்தை பெரியார், அறிவுச் சூரியன் அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள்களைத்  ‘தன்மானஎழுச்சி’ நாளென்று கொண்டாடினர் சிகாகோநகர் வாழ் தமிழர்கள்..   சிகாகோ பெருநகர் பெரியார் பன்னாட்டமைப்புச் செயலாளர் திருவாட்டி அருள்செல்வி வீரமணி தலைமையில், உதவி இயக்குநர் திரு.வ.ச.பாபு, சிந்தனைச் சிறப்பு உரையாளர் முனைவர் திரு.பிரான்சி சு.சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில் இந்த நாள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.   பல்துறை…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9   தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும்  பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன.   இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம்.   “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 – பெங்களூரு முத்துச்செல்வன்

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்  1/9   சாதிப்பிரிவு கூடாது என்பதுதான் நம் எண்ணம். இருப்பினும் பிராமணீயம் செல்வாக்குடன் திகழ்ந்து சமற்கிருதத்திணிப்பில் தொடர்ந்து ஈடுபடுகையில் நாம் அமைதி காத்துப் பயனில்லை. இந்த நேரத்தில் ஆரியச் சூழ்ச்சி குறித்துப் பெரியார் எச்சரித்த சிலவும் தொடர்பான சில கருத்துகளும் நினைவிற்கு வருகின்றன. அவற்றை இங்கே பகிர்கின்றேன்.    தந்தை பெரியார், ‘சமசுகிருதம் ஏன்‘ என்னும் தலைப்பில்(15–02–1960) விடுதலையில் பின்வருமாறு எச்சரித்துள்ளார்.   “இன்று இந்த நாட்டில் நடைபெறும் ஆட்சியானது, ‘சனநாயகக் குடியரசு’ என்னும் போலிப்…

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்

இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம்   தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும். இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப்…

ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது! – பெரியார்

ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது!   ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவையாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். –தந்தை பெரியார் ஈ. வே. இராமசாமி

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்!  திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள்.  அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி

வட அமெரிக்காவில் பெரியார் பிறந்த நாள் விழா

வட அமெரிக்காவில் வைக்கம் வீரர் தந்தை பெரியார் பிறந்த நாள் பெரு விழா பல்வேறு அமைப்புகள் பங்கு கொண்ட பயனுறு கருத்தரங்கம் பிரீமாண்டு, செப்.15 வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரீமாண்டு நகரில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் 137-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சமூக நீதிக் கருத் தரங்கமாக ஆவணி 26, 2046 /செப்டம்பர் 12-ஆம்  நாள் சனிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண் டாடப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பு,  அறிஞர் அம்பேத்கர் சீக்கியர் அமைப்பு, இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பு, அம்பேத்கர்…