தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி இந்நூலைத் தொடர்ந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், மொழியியல் குறித்த தமிழ், ஆங்கில ஆராய்ச்சி நூல்களைப் பேராசிரியர் சி.இலக்குவனார் எழுதி உள்ளார். ஒவ்வொரு நூலிலும் பேராசிரியரைப் புரட்சிப் போராளியாக அடையாளப்படுத்தும் கருத்துகளைக் காணலாம். “அழுக்கு படிந்த ஒன்றினைத் துடைத்துத் தூய்மையாக்கினால் புதிய ஒன்றாகப் பொலிவுடன் காட்சி அளிக்கும். இதுதான் அதன் உண்மைத் தோற்றம் எனினும் அழுக்கையே பார்த்துப் பழகியவர்களுக்கு இது…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும் உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார்….
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
[1] பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும். பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் உடன் பயிலும் தோழர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவரது தமிழ்ப்பற்றைத் தனித்தமிழ்ப்பற்றாக ஆற்றுப்படுத்தியவர் அவரது ஆசிரியர் அறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்குவனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர்…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன் ஆடி 01, 2047 / சூ லை 16,2016 அன்று தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா மாநாட்டில் முனைவர் க.தமிழமல்லன பங்கேற்றார். மூன்று நாள் விழாவின் இராண்டாம் நாளான அன்று காலையில் புலவர்மணி இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் ‘தனித்தமிழில் பெயர் வைத்தல்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் 1.50மணிமுதல் 2.30மணிவரையில் நிகழ்த்திய அவருடைய சொற்பொழிவை மக்கள் விரும்பிக் கேட்டனர். அவருடைய சொற்பொழிவுக்குச்…
மறைந்த தலைவர்களின் ஈகங்களைச் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு
மறைந்த தலைவர்களின் ஈகங்களை இளைய தலைமுறையினரிடம் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு காமராசர், மறைமலையடிகள் பிறந்த நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு வந்தவாசி : வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் சார்பில் ஆடி 01, 2047 / சூலை 16 இல்நடைபெற்ற கருமவீரர் காமராசர், தமிழறிஞர் மறைமலையடிகள் ஆகியோரின் பிறந்த நாள் விழாவில், மறைந்த நம் தலைவர்களின் ஈகங்களையும், மொழிப் பற்றையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது…
தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்? எல்லா விழா அழைப்பிதழ்களிலும் பிறமொழிக் கலப்பும் பிறமொழிஒலிக்கான அயல் எழுத்துகளும் கலந்து கிடக்கின்றன. தமிழ் அமைப்பினர், தமிழ்த்துறையினர் நடத்தும் விழாக்களின் அழைப்பிதழ்களாவது (நல்ல)தமிழில் அமைய வேண்டாவா? இல்லையே! தமிழ் ஆண்டையும் குறிப்பிடுவதில்லை. முதலெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் பெயர்களைக் குறிப்பதில்லை. நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களும் கிரந்தஎழுத்துகளின் கலப்பால் தமிழ், தான் பேசப்படும் பரப்பை இழந்துள்ளதையும் இழந்து வருவதையும் உணராமல் கிரந்தம் தேவை என்கின்றனர். அவ்வாறிருக்கும்பொழுது ஆர்வத்தால் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவோரிடம்…
மொழிமானக் காவலர் தமிழமல்லன் – மு.பாலசுப்பிரமணியன்
மொழிமானக் காவலர் தமிழமல்லன் தமிழுணர்வு குன்றாத தகையாளர் தன்மானம் நின்றோங்கும் நெறியாளர் உமியாக அயற்சொற்கள் கலப்பதையே உரக்க எதிர்க்கின்ற வீராளர் மல்லனுடை பாக்கள் என்றால் அனல்பறக்கும் நல்லொழுக்கம் கருத்துவளம் அணிவகுக்கும் கன்னலென தேன்பாக்கள் கரும்பினிக்கும் நன்னெறியில் பிறழ்வோரை சுட்டெரிக்கும் மின்சாரம் பாய்ந்ததுபோல் வீச்சிருக்கும் தென்னிலங்கை மண்பெருமை மூச்சிருக்கும் மண்மானம் மொழிமானம் காத்திருக்கும் எதுகையும் மோனையும் எழுந்துநிற்கும் எழுதென்று உவமையெலாம் ஏங்கிநிற்கும் தொடைவந்து தோள்சாய்ந்து காத்திருக்கும் தோதான இடம்கேட்டு பார்த்திருக்கும் படையெடுத்துச் சொல்லெலாம் படியிருக்கும் மடைதிறந்த வெள்ளம்போல் கவிசிறக்கும் பாவேந்தர் புகழ்பரப்பும் பண்பாளர் பாடாற்றி…