தன்னலம்  பெரிதா ? இனநலம்  பெரிதா ? 1. மனமொழியால் ஒன்றாது மதிமயங்கித்          தன்னலத்தால்  செயலே செய்வான்     மானமுமே  இல்லாத  மாக்களிலும்           கீழான  பிறவி  யாவான் தனதுநலம்  ஒன்றினையே  தலையாகக்      கொண்டேதான் வினையே செய்வான்    தன்னினத்துப் பகைவர்கால் தான்வீழுந்       தறுதலையன்  தமிழ  னல்லன் இனம்வாழ்ந்தால் இன்பமுடன் எல்லாரும்           வாழ்வாரென்  றெண்ண  மற்றே     இனப்பகையின்  பின்சென்றே  எடுபிடி           யாய்  இருப்பவனும்  இறந்தோ னாவான் இனப்பகையை  வீழ்த்துதற்கே  எவ்விழப்பு          வந்தாலும்  ஏற்று  வாழ்வோன்…