இராகுலுக்கு வாழ்த்துகள்! ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்
இராகுலுக்கு வாழ்த்துகள்! ஆனால் …… இந்தியத் தேசியப் பேராயத்தின் எண்பத்தேழாவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுலுக்கு வாழ்த்துகள்! 1885 இல் தொடங்கப்பெற்ற பேராயக்கட்சியில் 1919 இல் 36 ஆம் தலைவராகப் பொறுப்பெற்றார் மோதிலால் நேரு. இவருக்குப்பின் 100 ஆண்டுகளை நெருங்கும் இந்த ஆண்டில் இக்குடும்பத்தின் 6ஆவது வழிமுறையினராக, இக்கட்சியின் 87 ஆம் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் இராகுல்(காந்தி); ஆள் எண்ணிக்கை அடிப்படையில் 6 ஆவது வரிசைமுறை என்றாலும் (சவகர்லால் நேரு 8 தடவை தலைவர் பொறுப்பேற்றதுபோல்) பதவிஆண்டு வரிசையில் குடும்பத்தில் 44ஆம் வரிசையில் பொறுப்பேற்றுள்ளார். அஃதாவது 132…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்
(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன? போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி! ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை இது. நாம் எமது…