பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 13. தன்மதிப்பைப் பொன் போல் போற்று! அனைத்திலும் ஒருவருக்கு அடிப்படையான தேவை தன்மானம் பேணித் தன்மதிப்புடன் வாழ்வது. சாதிப் பிரிவுகள் மக்களைத் தன்மதிப்பிழக்கச் செய்து தாழ்வுபடுத்துகின்றன. எனவேதான் பாரதியார், “சாதிப்பிரிவுகள் சொல்லி – அதில் தாழ்வென்றும் மேலென்றும்” கொள்ளும் போக்கைக் கண்டித்துச் “சாதி நூறு சொல்லுவாய் போ போ போ” என விரட்டுகிறார். சில வகுப்பார் அடிமையாய் உழைப்பதற்கே பிறந்தவர் என்றும், ஒரு வகுப்பார் அவர் உழைப்பில் தாம் பிழைக்கப் பிறந்தவர்…