திருவள்ளுவர் பிறந்த நாளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா! – மறைமலை இலக்குவனார்
தமிழர் நாகரிகம் தமிழர் பண்பாடு குறித்த தமிழ்ச்சான்றோர் வகுத்த முடிவுகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா! கடவுள் வழிபாட்டில் ஊறிய நாம் பல்வேறு வடிவங்களைக் கற்பித்து வழிபடுகிறோம். ஓராற்றல் அஃதே பேராற்றல், அதற்கு வடிவம் இல்லை, அடியும் இல்லை, முடியும் இல்லை எனத் தெரிந்தும் முருகன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் திருமால் என்றும் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம் திருநாமம் நாம் வழங்கிக் கொண்டாடுகிறோம். இஃது நம்பிக்கை. இங்கே ஆராய்ச்சிக்கு இடமில்லை. பிறந்தநாள் கொண்டாடுகிறோம். யாருக்கு? ஆதியும் அந்தமும்…
வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு வி்ழா, சென்னை
ஆவணி 16, 2047 / செட்டம்பர் 01, 2016 தொடக்க அமர்வு முற்பகல் 10.30 நிறைவமர்வு பிற்பகல் 2.30 சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை தமிழகப் புலவர் குழு
தமிழகப் புலவர் குழு – புதிய பொறுப்பாளர்கள்
தமிழகப் புலவர் குழுவின் 107 ஆவது கூட்டம் கிருட்டிணன்கோவில் நகரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில், கோலாகலமாக நடந்தேறியது. பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 காலை 10.00 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டமானது தொடங்க, கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் க.சிரீதரன் வரவேற்புரையாற்றினார். புலவர் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், பொறுப்பாண்மைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புலவர் குழுவின் தலைவராக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், துணைத்தலைவராக இதுவரை செயலாளராகப்பணியாற்றிய, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், செயலாளராக முனைவர் மறைமலை இலக்குவனார்,…
பைந்தமிழ் போற்றிய பாவேந்தர்
பெயர் – ஊர் – பெற்றோர் : பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். புதுவை (புதுச்சேரி)யில் பெருவாணிகரான கனகசபை (முதலியாரும்(, இலக்குமி (அம்மையாரும்( இவரின் பெற்றோர்கள். புனைபெயரும், காரணமும்: இவர் புனைபெயர் ‘பாரதிதாசன்’ என்பது. மதுரையில் ‘தேசோபகாரி’ என்ற நாளேட்டில் முற்போக்குக் கொள்கைப் பற்றிப் பாட்டு எழுதி வந்ததைப் புதுவை அரசு எதிர்த்தது. இவர் அரசினர் ஆசிரியர் ஆதலால்! இவர் தம் கொள்கையை மறைத்துக்கொள்ள விரும்பவில்லை; தம் இயற்பெயரைப் புனைபெயரில் மறைத்துக் கொள்ள எண்ணினார். இவர் தமக்கொரு புனைபெயர் தேடும்போது, தம் நினைவில்…