இராசபக்சவை வீழ்த்தியது எது? – திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு
இராசபக்சவை வீழ்த்தியது எது? “எமது விடுதலை தொடர்பாக இலங்கைக் குடியதிபர்(சனாதிபதி) மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம்! எம் மாணவர்களின் மருத்துவ ஆய்வுகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும்….” இப்படியோர் உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள், இலங்கையின் ௧௪ (14) சிறைகளில் நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ௨௧௭ (217) தமிழ் அரசியல் கைதிகள். அத்தோபர் இறுதியில், தங்களது விடுதலை…
புத்த வெறியல்ல… இரத்த வெறி! -புகழேந்தி தங்கராசு
புத்த வெறியல்ல… இரத்த வெறி! பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது. எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப்…
நல்லிணக்கத்தைத் திணிக்க முடியுமா? – புகழேந்தி தங்கராசு
இனப்படுகொலையாளிகளின் கேடயம் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை வடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது. சொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற…
கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்
கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும் ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில்(தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்), கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடும் நீண்டகால நோக்கிலும் அதன் முதன்மையை எதிர்காலத் தலைமுறையினர் உணர்ந்து செயல்படும் விதத்திலும் கல்லூரிகள் தோறும் கணித்தமிழ்ப் பேரவைகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றது. ஏட்டளவில் அறிவிப்பு நின்றுவிடாமல் செயல்பாட்டிற்கும் விரைந்து வந்து…
ஒரு முறையாவது முத்தமிடவேண்டும்! – புகழேந்தி தங்கராசு
கதை எழுதுவதென்று முடிவெடுத்த கணத்தில் கண் முன்னே விரிந்ததெல்லாம் கண்ணீர்க்கதைகள்… எதை எழுதுவது? ஒருமுறைக்கு இருமுறை எண்ணிய பிறகுதான் எழுதுகிறேன் இதை! இது ஒரு விதையின் முகவரியை விவரிக்கிற முயற்சி… கவிதையென்றோ…. கதையென்றோ…. எப்படியாயினும் இதை அழைக்கலாம் நீங்கள்.. உண்மை – என்றே இதை விளிக்கிறேன் நான்! இரண்டாயிரத்து ஒன்பது பிறந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. பதுங்குகுழிக்குள் இருக்க நேரும் அவலம் மட்டும் முடியவில்லை அவர்களுக்கு! முரசுமோட்டையிலிருந்து அம்பலவன்பொக்கணை வரை மாறிக்கொண்டேயிருக்கிறது இடம்… பதுங்குகுழிகள் மட்டும் மாறவேயில்லை! இடப்பெயர்ச்சி என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு…
மாயாண்டிபாரதி என்னும் வரலாறு – பாலா, தமிழக அரசியல்
‘‘ஏறினா இரயிலு… இறங்கினா செயிலு!’’ – மாயாண்டி பாரதி என்ற சரித்திரம் மாயாண்டி பாரதி… மதுரை என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர். இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி பிப்பிரவரி 24 ஆம் நாள் விடுதலை மண்ணில் மரணமடைந்தார். மதுரை மேலமாசி வீதியில் 1917 ஆம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் மாயாண்டி. இவருக்கு 13 அகவை ஆகும்போது 1930ஆம் ஆண்டு திருமரைக்காடு என்னும் வேதாரண்யத்தில்…
ரோசா தமிழ்ப்பெயரா? – தமிழக அரசியல்
சூன் 5-ஆம் நாள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த நான்கு சிறுமிகளுக்கு, கலைஞர் தமிழ்ப்பெயர் சூட்டினார் என்று முரசொலி செய்தி வெளியிட்டிருக்கிறது. நான்கு சிறுமிகளுக்கும் ரோசா(ரோஜா), மல்லி, அல்லி, முல்லை, என்று பெயர் சூட்டினாராம் கலைஞர். இந்நிலையில் ரோசா என்பது தமிழ்ப்பெயரா என்று சருச்சையை க் கிளப்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவரான திருவள்ளுவன் இலக்குவனார். “தமிழில் ‘ரோ’ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லே கிடையாது. ரோசா(ஜா) என்பது தமிழ்ப்பெயர் அல்ல. ரோசாப்பூவும் தமிழ்நிலத்தைச் சேர்ந்தது அல்ல. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 பூக்களின்…
தொல்காப்பியரின் காலத்தை அறிவிக்க வேண்டும்! – ஆரா
தமிழின் தொன்மையை மீட்க ஒரு கோரிக்கை – இலக்குவனார் திருவள்ளுவன் உலகின் தொன்மையான முதல் மொழியான தமிழில் கிடைத்துள்ள முதல் நூல் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்.தமிழர்களின் வாழ்வியல், முதல்மொழியாம் தமிழின் இலக்கணம் என்று சொல்லும் தொல்காப்பியரின் காலத்தை முன்னிறுத்தி விவாதங்கள் சூடாகியிருக்கின்றன. தாவரங்களுக்கு உயிர் உண்டு எனக் கண்டறிந்ததைத் தொல்காப்பியர், தம் முன்னோர் கூறியதாகக் கூறி இருப்பார். தொல்காப்பியருக்கும் முன்னோரே இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் தமிழரின் மதிநுட்பத்திற்கு வேறு சான்று தேவையில்லை. இப்படிப்பட்ட தொல்காப்பியரை,, தமிழகம் முழுமையான அளவில் முக்கியபத்துவப்படுத்தவில்லை…