தமிழர் திருமண முறை – கே.கே.பிள்ளை
தமிழர் திருமண முறை அகத்திணையுள் திருமண வாழ்க்கை ‘கற்பு’ என அழைக்கப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோரும் அவர்களுடைய திருமணத்துக்கு உடன்படுவர்.1 திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும்.2 தீய கோள்கள் இடம் விட்டு விலகவும், நிலா உரோகிணியுடன் கூடவும் வேண்டும். விடியற்காலையிற்றான் திருமணம் நடைபெறும். திருமணப் பந்தலில் புதுமணல் பரப்பப்படும்; மாலைகள் தொங்கவிடப்படும்; அழகிய விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில் முகந்து தம் தலையின் மேல் தூக்கிக் கொண்டு வந்து ‘சிறு மண்டை’ என்னும்…
திருவள்ளுவர் ஏன் ‘வீடுபேறு’ பற்றிப் பாடவில்லை? – கே.கே.பிள்ளை
திருவள்ளுவர் ஏன் ‘வீடுபேறு’ பற்றிப் பாடவில்லை? பழந்தமிழகத்தில் மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டி வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்தெய்தும் என்பது தமிழரின் கொள்கையாக இருந்தது. இக்காரணத்தினாலேயே திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலை மட்டும் பாடினார்; வீட்டைப் பற்றிப் பாடினாரில்லை. அவருடைய காலத்திலேயே ஆரியரின் பழக்க வழக்கங்களும், தொன்மங்களும், மெய்யியல்களும் (தத்துவங்களும்) தமிழகத்தில் குடி புகுந்து விட்டன. தருமம், அருத்தம், காமம், மோட்சம் என்னும் ஆரியரின் கோட்பாடுகளைத் திருவள்ளுவர் அறிந்திருப்பார்….