அமைச்சர் இராசேந்திர பாலாசியின்பதவி பறிக்கப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அமைச்சர் இராசேந்திர பாலாசியின் பதவி பறிக்கப்பட வேண்டும்! மத்திய அரசின் / மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகளின் தமிழக வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காட்டினர் பிற மாநிலத்தவராகவே இருக்கின்றனர். இதனால் தமிழக இளைஞர்களின் நிகழ்காலமே இருண்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களிலும் தமிழர்கள் வேலை வாய்ப்புகள் வினாக்குறியாகி வருகிறது. எனவே, சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல் சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் என்னும் அமைப்பு #தமிழக-வேலை-தமிழருக்கே என்னும் குறிச்சொற்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியது….
#தமிழக-வேலை-தமிழருக்கே பரப்புரைக்கான சுட்டுரைக் குறிப்புகள்
#தமிழக-வேலை-தமிழருக்கே #Tamilnadu-Jobs-For-Tamils சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் சுட்டுரை மாதிரிக் குறிப்புகள் 1 . தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வெளி மாநிலத்தவர்க்கு அல்ல! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 2 . தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் – தொழிற்சாலைகளில் 90% தமிழர்களையே பணிக்கு அமர்த்து! 10% மேலுள்ள வெளியாரை வெளியேற்று! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 3. தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100% தமிழர்களுக்கே வழங்கு!வெளியாருக்கு தமிழ்நாட்டில் அரசுப்பணி அளிக்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 4. தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை வழங்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 5 . 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, தமிழர்களின் கல்வி, வணிகம், வேலை வாய்ப்பு களைப் பாதுகாக்கவே ‘தமிழ்நாடு’ மொழிவழித் தாயகமாக உருவானது. தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரைக் குடியமர்த்தி இந்நோக்கத்தை இந்திய அரசே சிதைக்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 6. தமிழ்நாடு அரசுப் பணிகளில், தமிழ் மொழி அறிவு இல்லாத –…
#தமிழக-வேலை-தமிழருக்கே #Tamilnadu-Jobs-For-Tamils சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம்
சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல் சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் ஏன்? பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் அரசியல், வரலாறு, பண்பாடு, தாயகம் ஆகியவற்றை தமிழர்களுக்கே உறுதி செய்யும் வகையில்தான் பல போராட்டங்களுக்குப் பிறகு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களுக்குரிய தாயகமாக “தமிழ்நாடு” அமைக்கப்பட்டது. இன்று “தமிழ்நாடு” அமைக்கப்பட்ட நோக்கங்கள் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலை வாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால்…