விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய்?- மாக்கவி பாரதியார்
விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச் ….. …. ….. … ….. சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? ‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? விதியே, தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய்’ என்பதன் மெய்யெனக்…