செந்தமிழ் இனமே! – தமிழநம்பி
செந்தமிழ் இனமே! – தமிழநம்பி செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே! முந்து தமிழும் முதனா கரிகமும் இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும் துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும் நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல் கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும் மிகையுங் கொளாது குறையுங் கொடாது தகைமிகு வணிகம் தரைகட லோடி நுண்கலை வானியல் நுட்ப அறிவியல் எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும் செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே! அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி! திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!…
குறளின்பம் : தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால் – தமிழநம்பி
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. – குறள். 1107 இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல், தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு, தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத், தாமும் விருந்தினருமாக, நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்….
கல்வெட்டிலேயே தொடங்கிய சமற்கிருதத் திணிப்பு – தமிழ நம்பி
கல்வெட்டிலேயே தொடங்கியசமற்கிருதத் திணிப்பு! கழக(சங்க)க் காலத்தில் தமிழ்நாட்டில் அரசர், போர்மறவர் முதலிய செல்வர் மனைகளில் மகன் பிறந்தால் அவனை முதன்முதலாகத் தந்தை சென்று காண்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சி! அதனைத் “தவமகன் முகம் காண்டல்” என்பர். தகடூரை ஆண்ட அதியமானுக்கு மகன் பிறந்த போது நடந்த இச்சிறப்பை ஒளவையார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்.100) கூறுவதை அறியலாம். இந்த வழக்கம் கி.பி.14ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதைத் திருமயம் பகுதியிலுள்ள நெக்கோணம் பெருமாள் கோயில் கல்வெட்டு (பி.எசு.672) தெரிவிக்கிறது. இங்கிருந்து நாடுகாவல்…