தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா
தமிழனின் தனிக்குணம்! சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…