தமிழனே சொந்தக்காரன்! வந்தாரை இருகரம் நீட்டி வரவேற்ற தமிழன்! வந்தார்கள் வென்றார்கள் கொன்றார்கள் வாய்க்கரிசி, வரவேற்க நீட்டிய கைகளில்! வாழ வந்தவனை வாழ வைத்து விட்டு வாழ வந்தவனிடம் வாழ வழி கேட்கும் வக்கற்ற தமிழனே! என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எடுத்துச் செல்பவன் பாடுகிறான் இருப்பவன் சுவைக்கிறான்! பிழைக்க வந்தவனால் பிழைப்பை இழந்து பிழைக்க வந்தவனிடம் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் கூட்டம் சுவைத்துச் சுவைத்து நசிந்து போனவன் தமிழன் கைதட்டி தன் கைவரிகளைத் தொலைத்தவன் தமிழன் பொழுது போக்குகளில் வாழ்நாள் பொழுதைப்…