வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! – பாரதிதாசன்
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போலே செழித்தஎன்…
தமிழன்னையே! பொறுத்தருள்! – கவிக்கோ ஞானச்செல்வன்
வாழிதமிழ் அன்னை வாழி! உளத்தினில் இனிப்பவள் உயிரினுள் தழைப்பவள் உழைப்பினில் சிரித்து நிற்பாள்! உலகினர் மகிழவே உயர்தனிச் செம்மொழி உருவுடன் இலங்கு கின்றாள்! வளத்தினில் நிகரிலள் வாழ்வினைத் தருபவள் வடிவினில் கன்னி யாவாள் வற்றாத நூற்கடல் வளர்புகழ் கொண்டனள் வாழிதமிழ் அன்னை வாழி! களத்தினில் வெற்றியே கண்டனள் தமிழர்தம் கருத்தினுள் நிறைவு பெற்றாள்! கனவுகள் ஆயிரம் கற்பனைப் பாயிரம் காணவே அருளு கின்றாள்! குளத்தினில் தாமரை கோடுயர் இமாலயம் குன்றாத புகழில் வானம்! குலவுதமிழ் அன்னையே குறைகளைப் பொறுத்தருள் கூட்டுவாய் வாழி நாளும்! [1980…