தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து!   உண்டி விற்கும் உண்மைத் தமிழரே அண்டிய தமிழர், அமிழ்தமிழ் தமிழ்தெனச் செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக! உண்டி கொள்ளும் உண்மைத் தமிழரே, தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து! தமிழர் தமிழனை ஆத ரிக்க! தஞ்சைத் தமிழன் செய்தது போல இனிதே யாயினும், எட்டியே ஆயினும், வாழ்வ தாயினும் சாவ தாயினும் தமிழன் ஆக்கிய துண்க தமிழகம் தன்னுரி மைபெறற் பொருட்டே! -பாவேந்தர் பாரதிதாசன்