தமிழன் என்றோர் இனமுண்டு, தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு – க.பூரணச்சந்திரன்
தமிழன் என்றோர் இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில், என் சிந்தனையில், அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வந்தவர்கள் ஒழுகலாறுகளையும்(கலாச்சாரத்தையும்) தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்த ஒழுகலாறுகளைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு. சமற்கிருதத்திற்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ்…
தமிழன் பெட்பு – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
தமிழன் பெட்பு தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடை வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும். 1 அறிவின் கடலைக் கடைந்தவனாம்; அமிழ்தத் திருக்குறள் அடைந்தவனாம்; (1)பொறியின் ஆசையைக் குறைத்திடவே பொருந்திய நூல்கள் உரைத்திடுவான். 2 கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான் கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்; புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம் புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான். 3 “பத்தினி சாபம் பலித்துவிடும்“ பாரில் இம்மொழி ஒலித்திடவே சித்திரச் சிலப்பதி காரமதைச் செய்தவன் துறவுடை…