ஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் திருவள்ளுவன் ஆதங்கம்: ‘தமிழக அரசியல்’
பர்மாவில் பரிதாப நிலையில் தமிழ் – பயணம் செய்த தமிழறிஞரின் ஆதங்கம் பருமாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையமும் சந்திரசேகரரின் நந்தவனம் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் இலக்கியப் பெருவிழாவை நடத்தின. அதில் சிறப்புரையாற்றச் சென்று சென்னை திரும்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன். அவரிடம் பருமாவில் தமிழன், தமிழின் நிலை என்ன என்று கேட்டோம். நம்மிடம் பருமா பற்றி விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் இலக்குவனார் திருவள்ளுவன். பர்மா( பருமா) என்று அழைக்கப்பட்ட நாட்டின் இப்போதைய பெயர்…
தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! – கோ. நடராசன்
தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! முந்து தமிழ் மொழி மறந்தான் முன்னோரின் வழி மறந்தான் மண்ணின் மரபிழந்தான் மான மென்றால் எதுவென்றான்-உயிராம் நீரின் உரிமை இழந்தான் மண்ணுரிமை பேணுதற்கு முன்னுரிமை தர மறந்தான் – வள்ளுவன் போதித்த பொன்னான கருத்திழந்தான் கடல் கடந்து வணிகம் செய்த கன்னல் நிகர் மொழி இனத்தான் – இன்று ஆதி புகழ் மறந்து அயலான் கால் நக்கி அடி பணிந்து அழிகின்றான் இந்து என்றும் இந்தியன் தானென்றும் திராவிடன் என்றும் தலித்திய னேயென்றும் தடம் மாறிப் போன…
இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? – தமிழ்நெஞ்சன்
இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? காலில் முள் குத்தினால் கைபோகும் எடுக்க கண்களில் கண்ணீர் வரும் வலி உணர்த்தும் மூளை இது உடலியக்கம் உயிரியக்கம் ஆனால் இந்தியா ஒரே நாடு என்றே கூப்பாடு இருந்தும் ஏன்வரவில்லை காவிரி? பாலாறு? முல்லை பெரியாறு? இந்தியா நாடல்ல துணைக்கண்டம் தமிழகம் மாநிலமல்ல தனிநாடு ஒரேநாடென்றால் கருநாடகாவில் இருந்து தமிழன் ஏதிலியாய் தமிழ்நாட்டிற்கு வருவதேன்? ஆங்கிலேயன் வருவதற்கு முன் இந்தியா இல்லை 56 தேசமாக இருந்தது இந்து ×தமிழன் இந்தி ×தமிழ்மொழி இந்தியா × தமிழ்நாடு…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) 03 “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . ….
தமிழரை வலிமை கொள்ளச் செய்குவாய்! – நாமக்கல் கவிஞர்
5,6/6 இளந்தமிழனுக்கு ஓடி ஓடி நாட்டி லெங்கும் உண்மை யைப்ப ரப்புவாய்; ஊன மான அடிமை வாழ்வை உதறித் தள்ள ஓதுவாய்; வாடி வாடி அறம்ம றந்து வறுமைப் பட்ட தமிழரை வாய்மை யோடு தூய்மை காட்டும் வலிமை கொள்ளச் செய்குவாய்; கூடிக் கூடிக் கதைகள் பேசிச் செய்கை யற்ற யாரையும் குப்பை யோடு தள்ளி விட்டுக் கொள்கை யோடு நின்றுநீ பாடிப் பாடித் தமிழின் ஓசை உலக மெங்கும் பரவவே பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப் பணியு மாறு சேவைசெய். 5 தமிழ னென்ற…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 2: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத வாழ்வு கண்ட தமிழகம் மகிமை கெட்டே அடிமைப் பட்டு மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல்லாரே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே, தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! தரணி யெங்கும் இணையி லாஉன் சரிதை கொண்டு…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 1: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01 இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே!…
எப்படி விடுதலை நாளாகும்? – ஆ.சு.மணியன்
எப்படி விடுதலை நாளாகும்? வாழ்க்கையில் குறையில்லாத மனிதனில்லை. சில குறைகளை முயன்றால் போக்கிவிடலாம். குறை என்னவென்று சொன்னால்/முறையிட்டால்தானே தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம். உலக அளவில் தமிழன்மட்டும்தான் தாய்மொழியில் குறையைச் சொல்ல/முறையிட முடியாது என்றால் எப்படி விடுதலை நாளாகும்? இரண்டாம் உலகப்போரில் மொழிவழிவிடுதலை வழங்கப்பட்டன. ஆனால் உலகின் முதன்மொழியான செம்மொழித்தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்கள் தமிழர்நாட்டில் இருக்கின்றனர். உலகின் அனைத்து நாட்டிலும் தமிழர் இருக்கிறனர். ஆனால் தமிழுக்கும் தமிழனுக்கும் விடுதலை இல்லை. உலகப்பொதுமறை வழங்கிய இலக்கிய இலக்கணமுடைய தமிழில் குறையை முறையிடும் உரிமை வழங்கப்படவில்லை…
தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன் – பூதத்தாழ்வார்
தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார். ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ‘ஞானத்தமிழ்’ என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார். தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்கவல்லது….
நான் தமிழன் எனவேதான்…. …. – இலக்குவனார் திருவள்ளுவன்
நான் தமிழன் எனவேதான் தமிழில் பேசுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழில் படிப்பதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழைப் படிப்தில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழ்நாகரிகத்தைப் பின்பற்றுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழர்க்கு உதவுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழினத்தைப் பே1ணுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழில் ஒப்பமிடுவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழில் வணங்குவதில்லை! நான் தமிழன் எனவேதான் தமிழில் வாழ்த்துவதில்லை! …
தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழனே இது கேளாய் — உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்! கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு! தமிழனே இது கேளாய்! தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு; தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு! கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு. தமிழனே இது கேளாய்! வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார் வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார் நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல…
கூனுமா தமிழன் வீரம்? – காசி ஆனந்தன்
தமிழ்க்குலம் புயலாய் மாறும்! தூற்றினார் தமிழை என்னும் துடித்திடும் சேதி கேட்டு மாற்றலர் மண்ணில் பாய்ந்து மானத்தைக் கல்லாய் மாற்றி ஏற்றினான் சேரன் ஆங்கே எதிரியின் தலைமீ தென்ற கூற்றினைக் கேட்ட பின்னும் கூனுமோ தமிழன் வீரம்? பறித்திடத் தமிழன் மண்ணைப் பரங்கியர் வந்த வேளை தறித்தவர் தலைகள் கொய்து தன்வலி காட்டி நின்ற மறப்புலித் தேவன் வீரன் மரபினில் வந்த நம்மோர் துரத்துது குண்டென் றாலும் துணிவிழந் தோடுவாரோ? உற்றசெந் தமிழி னத்தை ஒழித்திட முரசம் ஆர்த்த துட்டகை முனுவின் கொட்டம் தூள்படச்…