தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
எவராலே? ஈழம் சிதைவது எவராலே? தமிழர் அழிவது யாராலே? கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில் தமிழர் மடிவது எவராலே? உணவும் நீரும் சிறிதுமின்றி மருந்தும் உடையும் கிட்டாமல் நாளும் ஒழியும் சூழலுக்குத் தள்ளப்பட்டது யாராலே? கற்பும் பொற்பும் சிதைப்பவரை ஓட ஓட விரட்டாமல் அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை வந்தது இன்று எவராலே? தமிழர் அழுவது யாராலே? இந்தியம் சிரிப்பது எவராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்
‘தமிழம் பண்பலை’ : பொள்ளாச்சி நசன் வேண்டுகோள்
‘தமிழம் பண்பலை’ தொடங்கும் பொள்ளாச்சி நசன் வேண்டுகோள் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் கடந்த 10 நாள்களாகத் தமிழம்.பண்பலையை வடிவமைப்பதிலேயே, என் முழு நேரமும் கழிந்தது. நேற்றுதான் அதற்கான இறுதிவடிவம் கொடுத்து முழுமைப்படுத்தி இணைத்து உள்ளேன். சிறு சிறு பிழைகள் இருக்கலாம், அவை வரும்காலத்தில் சரி செய்யப்படும். தமிழ் உணர்வுள்ள பாடல்களை வெளியிட்டு இருப்பவர்கள் அருள்கூர்ந்து அந்த இறுவட்டுகளை அனுப்பி வைக்கவும். தமிழம் வலையை தமிழம்.நெட் இணையதளத்திலும் கேட்கலாம். ஆன்டிராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்கள் அதற்கான மென்பொருளை இறக்கி நிறுவிக் கொண்டு தொடர்ந்து கேட்கலாம்….