அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!- சுப காண்டீபன்
அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! சுப காண்டீபன் பசிக்கிறதம்மா… பசிக்கிறது! இரு கரம் கூப்பி கேட்கின்றேன். என் வயிற்றினுள் ஏதோ சத்தங்கள் பல கேட்கின்றன. எனக்கு அச்சத்தம் என்னவென்றும் தெரியவில்லை. ஒன்றும் புரியவும் இல்லை. ஈர் இரண்டு நாட்களாக எந்த உணவும் உண்ணவில்லை. இரண்டு நாட்களாக மலம் கூடக்கழிக்கவில்லை. ஒட்டிய வயிற்றுடன் அலைந்து திரிகின்றேன். ஒரு பிடி உணவேனும் தருவீர்களென எண்ணி! எனைப்பெற்றவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் வருவேனா உங்களின் வாசல் தேடி? முலைப்பால் கூட முழுதாகப்பருகவில்லை. எனை வயிற்றினில் சுமந்தவளும் வயிராற…