வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில! – இலக்குவனார் திருவள்ளுவன்
வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில! இப்போதைய – தி.பி.2047 / கி.பி. 2016 ஆம் ஆண்டுச் – சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்வர் புரட்சித்தலைவி செயலலிதாவிற்கு வாழ்த்துகள்! ‘பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்பர். அதுபோல் புள்ளிவிவரங்களை அடுக்கி, உண்மையான வெற்றியல்ல இது எனச் சில தரப்பால் கூறப்பட்டாலும் நம் அரசியலமைப்பின்படி இதுதான் வெற்றி. ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் மக்களாட்சியில் இதுதான் வெற்றி. மொத்தத்தில் மிகுதியான வாக்குகள் பெற்றுச் சில இடங்களில் வெற்றி பெற்ற கட்சியைவிட…