தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம் – மறைமலையடிகள்
தமிழைத் தூயதாகப் பேணல் ஒவ்வொருவரின் கடமையாம்! தொன்றுதொட்ட சிறப்பும் இலக்கண இலக்கிய வரம்புந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரொடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், உலக வழக்கிற்குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்…