தமிழர் திருமண முறை சென்ற 1500 ஆண்டுகளாக ஊறியேற்றிய புதிய ஆரியக்களியால் தமிழர், தமிழையும் மறந்து, முன்னோர் பெருமையும் உரனும் துறந்து, பிறர் நகைப்புக்கு ஆளாயினர். தமிழர் திருமணத்துக்கு எவ்வகைச் சடங்கும் இன்றியமையாததெனப் பண்டைத் தமிழ்மக்கள் கருதவில்லை என்பதற்குப் பற்பல சான்றுகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் உண்டு. முதற்கண்ணும் எஞ்ஞான்றும் உழுவலன்பே மணத்திற்கும், இல்வாழ்க்கை இன்பத்திற்கும் உரியதொன்றாக இருந்தது. பொருந்தாதனவும் செயற்கையும் ஆகிய ஆரியர் வழக்குகளையும், முறைமைகளையும் தமிழரின் காதல்பற்றிய வழக்குகள், குறிக்கோள்களோடும் இணக்கி வேறுபாடு அழித்து ஒன்றாக்கச் சில பிராமண பிராமணீய இலக்கண…