ஊசுடனில் தமிழர் திருவிழா

அமெரிக்காவின் டெக்சசு மாகாணத்தில் ஊசுடன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் சார்பில் பியர்லேண்டு, கேட்டி, உட்லண்ட்சு மன்றக் கிளைப் பள்ளிகளது மாணாக்கர்கள் பங்குபெற்ற திருக்குறள் திருவிழா,பொங்கல் திருவிழா, பட்டிமன்ற நிகழ்வுகள் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. பியர்லேண்ட் கிளையில் மேல்நிலை மாணாக்கர்கள் வாதம்புரிந்த “இயந்திரத்தினால் நமக்கு ஏற்படுவது நன்மையா? தீமையா?” எனும் தலைப்பிலான பட்டிமன்றம் மாணாக்கர்களின் அறிவுத்திறனை அதுவும் தமிழில் வெகு சிறப்பாக வெளிக் கொணர்ந்தது. அனைத்துக் கிளைகளின் மாணாக்கர்களும் பங்குபெற்ற திருக்குறள் திருவிழாவில் ஒரு திருக்குறளுக்கு ஒரு தாலர் என்ற அடிப்படையில் திருக்குறளையும் அதற்கான…