இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள் – ஞா.தேவநேயப்பாவாணர்
இந்திய நாகரிகம் மட்டுமன்றி உலக நாகரிகமே இந்திய ஆரியரதென்று காட்டுதற்கு, வேதகாலத்தை அளவிறந்து முன் தள்ளி வைக்கும் முயற்சியொன்று இன்று வடஇந்தியாவில் நடை பெற்று வருகின்றது. அறியப்பட்ட தம்பியின் அகவை (வயது) உயர்த்திக் கூறப்படின், அண்ணனின் அகவை தானே உயர்தல் காண்க. இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள்- ஞா.தேவநேயப்பாவாணர் 1. பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத்தலும் மறுத்தலும். 2. பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல். 3. தமிழ்நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதக்காலத்தி னின்றும் தொடங்கல்…