திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை
திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் தமிழ்நாட்டில் விசயநகர அரசர்களின் சார்பாளர்கள்(பிரதிநிதிகள்) 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். அதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களின் தலைமுறையினர் தென்பாண்டி நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் விசயநகர ஆட்சிக்கு உட்படாமல் பன்முறை மதுரை நாயக்கர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர். மறவர்களுக்கு இராமநாதபுரம் சேதுபதிகள் தலைமை தாங்கினர். மதுரையில் முதன் முதல் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விசுவநாத நாயக்கனையும் அவனது தளவாயான அரியநாத…
நாடாளும் முத்தம்மா – நா.வானமாமலை
நாடாளும் முத்தம்மா முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டில் உழவர் பெருமக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றூர்களில் இவளுக்குப் பெரிய கோவிலும் தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு, முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ்கடலுக்கும் அப்பாலுள்ள, மணிநாகப் புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து பெண்கள் மூவர் தோன்றினர். அவர்கள் பிரம்மராக்கு சக்தி, சின்னமுத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தையைப் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டு போய்க் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள…